தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் உள்ள மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஃபாஸ்டேக் முறையில் உள்ள குளறுபடிகள் குறித்தும் லாரிகளுக்கு காப்பீடு தொகை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் குமாரசாமி,
முன்னூறு ஓட்டுநர்களை மீட்க நடவடிக்கை! - லாரி உரிமையாளார் சங்கம் - 300 ஓட்டுநர்களை மீட்க நடவடிக்கை
நாமக்கல்: ஜம்மு காஷ்மீரில் முன்னூறுக்கும் மேற்பட்ட லாரி ஒட்டுநர்கள் சிக்கி இருப்பதால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில் மாநில தலைவர் குமாரசாமி பேட்டியளித்துள்ளார்.
![முன்னூறு ஓட்டுநர்களை மீட்க நடவடிக்கை! - லாரி உரிமையாளார் சங்கம் state lorry owners association meeting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5436567-18-5436567-1576835226369.jpg)
ஜம்மு காஷ்மீரில் முன்னூறுக்கும் மேற்பட்ட லாரி ஒட்டுநர்கள் சிக்கி இருப்பதாகவும் போதிய உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து பத்திரமாக மீட்க அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசு கவனத்திற்கு இந்த விவகாரம் குறித்து விரைவில் கொண்டுசெல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கிருஷ்ணகிரியில் உள்ள சுங்கச்சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஃபாஸ்டேக் முறையில் ஏற்பட்ட குளறுபடியால் ஓட்டுநர் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதுபோன்று பல சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடைப்பெற்றுவதாகவும் இதனை கண்டித்தும் தமிழகத்தில் காலாவதியான சுங்கசாவடிகளை மூடக்கோரியும் விரைவில் கிருஷ்ணகிரியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.