தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13 வயதிற்குட்பட்ட ஐவர் கால்பந்துப் போட்டி: 24 அணிகள் மோதல் - State level football match in namakkal

நாமக்கல்: 13 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

State level football match in namakkal, 13 வயதுகுட்பட்ட ஐவர் கால்பந்துப் போட்டி
13 வயதுகுட்பட்ட ஐவர் கால்பந்துப் போட்டி

By

Published : Jan 19, 2020, 1:12 PM IST

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் தனியார் அகாடமி சார்பில் 13 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்துப் போட்டிகள் தொடங்கியது. இன்று நிறைவடையும் இந்தப் போட்டிகளில் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

ரோம் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத்!

லீக், நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் 24 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் மூன்று அணிகளாகப் பிரித்து அந்தப் பிரிவுக்குள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசும், சுழற்கோப்பையும், சிறந்த வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

13 வயதிற்குட்பட்ட ஐவர் கால்பந்துப் போட்டி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details