தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் முதல் திண்டுக்கல் பிரிவு வரையிலான இருப்புப்பாதையில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ், தெற்கு ரயில்வேயின் பல்வேறு துறை அலுவலர்கள், ரயில் பாதுகாப்பு முதன்மை ஆணையர் உடனிருந்தனர்.
நாமக்கல் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பூங்கா, ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முன்பதிவு மையம், சாதாரண பயணச்சீட்டு மையம், புதிய சரக்கு அலுவலகம், பயணிகளுக்கான எல்.இ.டி. முன்னறிவிப்பு பலகை ஆகியவற்றை ஜான்தாமஸ் திறந்து வைத்தார்.
ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சேலம், கரூர், திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கரூர், ஈரோடு வழித்தடத்தில் இரட்டை ரயில்பாதை அமைப்பதற்கான இறுதி சர்வே பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் வழித்தடத்தில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படும். எழும்பூர், சேலம் விரைவு ரயிலை நாமக்கல் வழியாக கரூர் வரை நீடிப்பதற்கான கோரிக்கை எழுந்துள்ளது. அது குறித்து பரிசீலிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் நாமக்கல்லில் பேட்டி தொடர்ந்து கரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த ஜான் தாமஸ், கரூர் வைஸ்சியா வங்கி சார்பில் ரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்ட பேட்டரி காரை தொடங்கி வைத்தார். பின்னர் ரயில் நிலைய மேடை, இருப்புப்பாதை ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஜான் தாமஸ், 'கரூரிலிருந்து சென்னைக்கு புதிய பகல் நேர ரயில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கரூரில் குட்ஷெட் அமைக்கக் கோரிக்கை வரவில்லை வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் முதல் எக்மோர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை கரூர் வழியாக இயக்குவதற்கு வாய்ப்பில்லை. திருச்சி, பாலக்காடு பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியாது. கரூரிலிருந்து சென்னைக்கு கரூர் வழியாக வேறு எந்த ரயிலையும், இயக்க முடியாது. அதே போல, திருச்சியிலிருந்து கரூர் வழியாக சேலத்திற்கு கூடுதல் ரயில் இயக்க முடியாது' என்று திட்டவட்டமாக கூறினார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் பேட்டி தொடர்ந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸிடம், லாலாபேட்டை ரயில்வே குகை வழிப்பாதையின் அவலநிலை குறித்து லாலாபேட்டை ரயில்வே கேட் போராளி கிருஷ்ணமாச்சாரியார் புகார் தெரிவித்தார்.
பல நாட்களாக ரயில்வே குகை வழிப்பாதையினால் எந்த வித பயன்பாடும் இல்லை என்றும், அந்த ரயில்வே குகை வழிப்பாதையினை மறு ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: குமரி முதல் கொல்கத்தாவரை பைக் பேரணி தொடக்கம்!