நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி பொன்னேரிபட்டியை சேர்ந்தவர் நல்லம்மாள்(65). இவர் விவசாய கூலி வேலை செய்துவருகிறார். இவரது கணவர் சின்னசாமி கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இவரது மகள் கோமதி, மகன் சண்முகம் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது.
கணவர் சின்னசாமி இறந்துவிட்டதால், நல்லம்மாள் தனி வீட்டில் இருந்துகொண்டு 100 நாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும், நகைகளை விற்றப்பணம் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை வங்கியில் போடுவதற்காக வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருக்கும் பணம் ரூ. 3 லட்சத்தையும், குடியிருக்கும் வீட்டினையும் தனக்கு கொடுக்கும்படி மகன் சண்முகம், தாய் நல்லம்மாளிடம் அடிக்கடி பிரச்னை செய்துவந்துள்ளார்.
சாவியை பிடுங்க முயற்சி
இந்நிலையில் சண்முகம், சண்முகத்தின் மனைவி ஜானகி ஆகியோர் நேற்று முன்தினம் (ஆக. 20) மாலை வேலையில் இருந்து வந்துகொண்டிருந்த நல்லம்மாளிடம் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டனர். இதில் ஒரு கட்டத்தில் நல்லம்மாளின் கையில் வைத்திருந்த வீட்டு சாவியை பிடுங்குவதற்காக சண்முகமும், அவரது மனைவியும் நல்லமாளின் கையை பிடித்து தரதரவென இழுத்து அவரை தாக்கியுள்ளனர்.