தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீயணைப்பு துறையினருக்கு போக்குகாட்டிய  நாகபாம்பு! - snakes in tamilnadu

நாமக்கல்: இருச்சக்கர வாகனத்தின் சீட்டின் அடியில் மறைந்திருந்த ஒன்றரை அடி நீள நாகபாம்பை தீயணைப்பு துறையினர் ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர்.

snake

By

Published : Oct 20, 2019, 5:42 PM IST

நாமக்கல் டவுன் அடுத்த கடைவீதி செங்கழனி பிள்ளையார் கோயில் அருகே நடராஜர் என்பவர் கவரிங் நகைகள் விற்பனை செய்யும் கடையினை நடத்திவருகிறார். இந்நிலையில் இன்று காலை 10மணியளவில் வழக்கம் போல் கடையினை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையின் மேற்கூரையில் இருந்து விழுந்த நாகபாம்பு ஒன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்தின் உட்பகுதியில் சென்று பதுங்கிக்கொண்டது.

அந்தப் பாம்பை வெளியேற்ற நடராஜன் உள்ளிட்டோர் முயன்ற போதும், பாம்பு வெளியே வராத நிலையில் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இருச்சக்கர வாகனத்தின் ஒவ்வொரு பாகங்களாக கழற்றி வாகனத்தின் சீட்டின் அடிபாகத்தில் பதுங்கியிருந்த ஒன்றரை அடி நீளமுள்ள நாகபாம்பை பிடித்தனர்.

பாம்பை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர்

பின்னர் பிடிப்பட்ட நாகபாம்பை தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த நாகபாம்பை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தெருவில் சுற்றித் திரிந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது!

ABOUT THE AUTHOR

...view details