சேலம் மாவட்டம் தேவூரை சேர்ந்த சிவனாடியார் சரவணன் என்பவர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வீடியோ ஒன்று பதிவு செய்து அதனை உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில், தனது மரணத்திற்கு தேவூர் காவல் உதவி ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனிதான் காரணம் எனக் கூறியிருந்தார். இதனையடுத்து அவரது தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட உதவி ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய சிந்தனை பேரவையினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சிவனடியார் சரவணன் தற்கொலை - தேசிய சிந்தனை பேரவையினர் மனு - District collector
நாமக்கல்: குமாரபாளையம் அருகே சிவனடியார் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய சிந்தனை பேரவையினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Sivanadiar Saravanan suicide issue Petition
அந்த மனுவில், சரவணனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோடு, அவரது குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.