கரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வருகின்றனர். நாமக்கல்லில் பேருந்து நிலையம், உழவர் சந்தை, சேலம் சாலை, பரமத்தி சாலை, மணிக்கூண்டு, மோகனூர் சாலை, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கபட்டு, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.