பாலியல் புகாரில் சிக்கியுள்ள காவல் உயர் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய மாணவர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் பாலியல் புகாரில் சிக்கிய காவல் உயர் அலுவலரின் உருவப் படத்தை தீயிட்டு கொளுத்த முயற்சித்தினர். இதனைக் கண்ட காவலர்கள், காவல் உயர் அலுவலரின் உருவப் படத்தை பிடுங்க முயற்சித்தனர்.