நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். கந்தசாமி ஒரு கட்டடத் தொழிலாளி. கந்தசாமி நேற்று வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு அவரது மனைவி அங்கம்மாள் தந்தை வீட்டுக்கு, மகளுடன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கந்தசாமி தனது வீட்டின் வெளிப்புறப் பகுதியில், தனியாக கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை திடீரென கந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அங்கு சென்ற பார்த்த போது கந்தசாமியும், அவரது கட்டிலும் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தது.