தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாம் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கிறோம்; அவர்கள் நோட்டை கொடுத்து நாட்டை விற்கிறார்கள்' - சீமான் - Seaman, who criticized Stalin

நாமக்கல்: ”மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை குறித்து ஸ்டாலின் இப்போது பேசுகிறார், ஆனால் அவர் சென்னை மேயராக இருந்தபோது யார் அகற்றினார்கள், ஏன் அப்போது பேசவில்லை” என தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கலில் சீமான் பரப்புரை
நாமக்கலில் சீமான் பரப்புரை

By

Published : Mar 26, 2021, 7:40 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு முறையும் மாறி மாறி திமுக, அதிமுகவிற்கு வாக்களிக்காமல் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தல் குறித்து மட்டுமே சிந்திப்பார்கள். தலைவர்கள்தான் அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பார்கள். தேர்தல் வரும்போது மட்டுமே மக்களைப் பற்றி திமுகவும் அதிமுகவும் சிந்திக்கிறது. மற்ற அரசியல் கட்சியினர் வைத்துள்ள கூட்டணிகள், கொள்கை இல்லாத கூட்டணி. கொள்ளை அடிக்கும் கூட்டணி" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது பற்றிஸ்டாலின்தற்போது பேசுகிறார். ஆனால் அவர் மேயராக இருந்தபோது யார் மனிதக் கழிவுகளை அகற்றினார்கள்? அப்போது ஏன் பேசவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.

நாமக்கலில் சீமான் பரப்புரை
மேலும், "நம் வலிமையான ஆயுதம் ஓட்டு. நாம் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் நோட்டைக் கொடுத்து நாட்டை விற்கிறார்கள். நாட்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதன் காரணமாக நூலகங்களை மூடிவிட்டு சிறைச்சாலையை விரிவாக்கம் செய்து வருகிறோம். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் குப்பையை அள்ளிப் போட்டு நெருப்பை அணைக்க முடியாது. மே 2ஆம் தேதிக்குப் பிறகு நாம் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details