நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில், நாமக்கல் எருமப்பட்டி ஒன்றியம் ஜம்புமடை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்து தரக் கோரி மனு அளித்தனர்.
பேருந்து வசதி செய்து தரக் கோரி பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு - நாமக்கல்
நாமக்கல்: பேருந்து வசதி செய்து தரக் கோரி பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து பள்ளி மாணவிகள் கூறும்போது, ‘ஜம்புடை கிராமத்திலிருந்து எருமைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 8 கிமீ தொலைவில் உள்ளது. தினமும் காலையில் அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் செல்கிறோம். ஆனால் மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பும் நேரத்திற்கு பேருந்து இல்லாததால் பெரும் சிரமத்துக்குள்ளாகிறோம். மேலும், காலையில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இருப்பதால், 12ஆம் வகுப்பு மாணவிகள் சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்’ என வேதனை தெரிவித்துள்ளனர்.