நாமக்கல்: திருச்செங்கோடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் நேற்று (மார்ச் 12) வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றவர், மதியம் 2.30 மணியளவில் வாந்தி வருவதாகக் கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர், யாரும் எதிர்பாராத விதமாக பள்ளி வளாகக் கட்டடத்தின் இரண்டாவது மாடிக்குச் சென்று கீழே குதித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சக மாணவிகள் படுகாயமடைந்த மாணவியை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.