தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாமதமாக விடுமுறை அளித்த பள்ளி நிர்வாகம்! - மாணவர்கள் அவதி - School administration of late leave at namakkal

நாமக்கல்: சேந்தமங்கலம் அரசுப் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்த நிலையில், பள்ளி நிர்வாகம் தாமதமாக விடுமுறை அறிவித்துள்ளது.

நாமக்கல் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி

By

Published : Nov 9, 2019, 4:57 PM IST

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை உள்ளது. இப்பள்ளியில், 13 மாணவர்களும் 24 மாணவிகளும் என மொத்தம் 37 பேர் பயின்றுவருகின்றனர்.

நேற்று இரவு பெய்த கனமழையினால் பள்ளி வளாகம், வகுப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைக்கு மழைநீரில் நடந்து சென்றனர். அதோடு வகுப்பறை, சத்துணவு சமையல் கூடம், தலைமை ஆசிரியர் அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்பதால் மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

நாமக்கல் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி

பின்னர், பள்ளி வளாகத்தின் நிலைமையை அறிந்த வட்டார கல்வி அலுவலர் செல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மதியம் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர்.

இதையும் படிங்க: இடியால் நீர் ஊற்று - நாமக்கல் மாவட்டத்தில் அதிசயம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details