தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சுங்கக் கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்களே ஏற்கவேண்டும்' - டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை - lpg tanker lorry owners

நாமக்கல்: எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கான சுங்கக் கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்களே ஏற்கவேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

lorry-owners-meeting

By

Published : Oct 29, 2019, 10:21 AM IST

தென்மண்டல எஸ்.சி., எஸ்.டி., எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் அகிலன், டேங்கர் லாரிகளுக்கான சுங்கக் கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எஸ்.சி, எஸ்.டி டேங்கர் லாரிகள் எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் வேலையின்மை காரணமாக லாரி உரிமையாளர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டேங்கர் லாரி உரிமையாளர்கள்

மேலும், எங்களுக்கு எதிராக செயல்படுகின்ற தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார். தற்காலிகமாக ஓடிக்கொண்டிருக்கும் எல்பிஜி டேங்கர் லாரிகளை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் திருடிய மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details