தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி தலைமையில் மணல் லாரி உரிமையாளர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் மனு ஒன்று அளிக்க வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸ் ராஜ்குமாரிடம் அளித்தனர்.
பின்னர் பேசிய செல்ல.ராசாமணி, ”தமிழ்நாடு முழுவதும் நாமக்கல் மாவட்டம் ஆரியூர், புதுக்கோட்டை மாவட்டம் கோவில்வயல், வேலூர் மாவட்டம் வடுகங்தாங்கல், தஞ்சாவூர் மாவட்டம் நீர்த்தநல்லூர் ஆகிய ஐந்து அரசு மணல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதன் மூலம் அரசு கட்டுமான பணிகளுக்கு 600 முதல் 700 லோடு மணல் வழங்கப்பட்டுவருகிறது. இவை அரசு ஒப்பந்த பணிக்கு பயன்படுத்தாமல் தனியாருக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதனால் இதனை தடுக்க வேண்டும். அனைத்து நாட்களிலும் ஆன்லைன் மூலம் தனியார் லாரிகளும் மணல் முன்பதிவு செய்திட வேண்டும்.