தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேசினார். அப்போது, “ நாளை விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் மணல் லாரிகள், நாளை ஒருநாள் மட்டும் இயங்காது. லாரி உரிமையாளர்களின் நலனிற்கு எதிராக செயல்படும் தமிழக அரசின் போக்குவரத்துத்துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
’நாளை மணல் லாரிகள் ஓடாது’ - பாரத் பந்த்
நாமக்கல்: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் மணல் லாரிகள் இயங்காது என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
strike
வரும் 27 ஆம் தேதி மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் தன்னிச்சையாக வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டால் அது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் “ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவு; நாடு தழுவிய முழு அடைப்புக்கு திராவிடர் கழகம் ஆதரவு!