தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 18, 2020, 9:21 PM IST

Updated : Dec 19, 2020, 10:12 AM IST

ETV Bharat / state

வேளாண் சட்டங்களை வைத்து மக்களைக் குழப்பும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள்!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை வைத்து மக்களை குழப்பி ஆதாயம் தேடுகின்றன என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.

ruling and opposing party Confuses the people with farm laws
ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை வைத்து மக்களை குழப்புகிறது

நாமக்கல்:தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியாவின் 70 விழுக்காடு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு அதற்கு மானியம் வழங்கப்பட்டுவருகிறது. அதேசமயம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் இல்லை.

மத்திய அரசு அண்மையில், கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. அதேபோல், மிகப்பெரிய தீமையும் இல்லை. இச்சட்டங்களை வைத்து ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் விவசாயிகளை குழப்பி ஆதாயம் தேடுகின்றன. சம்பள கமிஷன் பரிந்துரையை அரசு அமல்படுத்துவது போல் விவசாய கமிஷனின் பரிந்துரையையும் உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை வைத்து மக்களை குழப்புகின்றன

மின்துறையில் தனியார் மூலம் பணியமர்த்துவது பொதுமக்களை பாதிக்கும். இதனால், மக்கள் பாதிக்கப்படுவர். தமிழ்நாட்டில் 50ஆண்டுகளாக சினிமோ மோகம் அரசியலை ஆட்டி படைத்துவருகிறது. அரசுக்கும் சினிமா மோகம் உள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ராசம்பாளையம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Last Updated : Dec 19, 2020, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details