நாமக்கல் அருகே உள்ள குட்டைமேலத்தெருவில் வடமாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரது வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கிவைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக நாமக்கல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - நாமக்கல்லில் 3 பேர் கைது - ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
நாமக்கல்: தடைசெய்யப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பதுக்கிவைத்திருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
kutga seized in namakkal
இதன்பேரில், நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த காந்திலால், ரத்தன்ராம், ரமேஷ்பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.