தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் வாரச்சந்தை: அமோக வியாபாரம்

நாமக்கல்: பக்ரீத் பண்டிகையையொட்டி நாமக்கல் வாரச்சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

goat

By

Published : Aug 10, 2019, 4:27 PM IST


நாமக்கல்லில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை நடைபெறவது வழக்கம்.

அதன்படி, இன்று சனிக்கிழமை என்பதால் கரூர், ஈரோடு, வேலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நாமக்கல் வாரச்சந்தையில் ஆடுகளை விற்பனை செய்துவருகின்றனர்.

எந்த வாரமும் இல்லாத அளவிற்கு இன்று ஆடு வியாபாரம் படுஜோராக நடைபெற்றது.

நாமக்கல் வாரச்சந்தை

நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக இன்று சுமார் நான்கு ஆயிரம் ஆடுகள் சந்தையில் விற்பனைக்கு வந்தன.

ஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்தபட்சமாக ரூ. மூன்று ஆயிரம் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன.

காலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற விற்பனையில் சுமார் ஒரு கோடி 60 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. இது கடந்த ஆண்டைவிட இருமடங்கு அதிகம் என வியாபாரிகள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details