சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலணி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடியை தாக்கிய கும்பல்:
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் கடந்த பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (டிச.22) மாலை செல்லத்துரை தனது காரில் தனியாக சென்றுகொண்டிருந்தார், அப்போது எதிரே இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத கும்பல், காரை வழிமறித்து செல்லத்துரையை சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் செல்லத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிச்சிபாளையம் காவல் துறையினர், செல்லத்துரையை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், செல்லத்துரையை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலை தேடி வந்தனர்.