ஏடிஎம்மில் பணத்தைத் திருட எலிபோல் நுழைந்த இளைஞர் - கொள்ளை முயற்சியில் பலே திருப்பம்!
நாமக்கல்: அணியாபுரத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு (ஆக.5) அந்த ஏடிஎம் மையத்தில் சத்தம் கேட்பதாக, அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஏடிஎம் மையத்தில் சத்தம்
அப்போது மோகனூர் காவல் துறையினர் சந்தேகத்தின் பெயரில், ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்த போது வட மாநில இளைஞர் ஒருவர் இயந்திரத்தின் பின்புறத்தில் துளையிட்டு பணத்தை திருட முயன்று, எலி போல் அதனுள் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.
இதனைக் கண்ட காவல் துறையினர் அவரை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
எலி போல் சிக்கிய வட மாநில இளைஞர் எலி போல் சிக்கிய இளைஞர்
விசாரணையில் அவர் பிகார் மாநிலம், கிழக்கு சாம்ரான் பகுதியைச் சேர்ந்த உபேந்திர ராய்(28) என்பதும், மோகனூர் அருகே பரளியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கோழித்தீவன ஆலையில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
ரூ.2.65 லட்சம் பணம் தப்பியது
இதன்பின் வட மாநில இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த திருட்டு முயற்சியில் இருந்து ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.2.65 லட்சம் பணம் தப்பியது.
இதையும் படிங்க:ஹெராயின் விற்பனை- மேற்கு வங்க நபர் சென்னையில் கைது