தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் - ஆடிப்பெருக்கு

நாமக்கல்: காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகனை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தந்தை மற்றும் மகன்

By

Published : Aug 3, 2019, 9:16 PM IST

Updated : Aug 3, 2019, 9:58 PM IST

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஈரோடு பழையபாளையத்தைச் சேர்ந்த, திருமூர்த்தி (40) என்பவர் தன் மகன் கிருஷ்ணனுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தந்தை, மகன்

அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த தீயணைப்பு வீரர் மோகன் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்துவிட்டு, ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்திச் சென்று அவர்களைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதன்பின், விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மோகனுடன் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தந்தை மற்றும் மகன்

உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த இருவரையும் முதலுதவி அளித்த பின் இறையமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சேர்த்தனர்.

Last Updated : Aug 3, 2019, 9:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details