நாடு முழுவதும் 74ஆவது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக சுதந்திர தினத்தின் போது காவல்துறை அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தற்போது கரோனா தொற்று காரணமாக கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் என யாரும் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும், தகுந்த இடைவெளியுடன் சுதந்திர தினம் கொண்டாட நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்ச்சிக்கு காவல்துறை ஒத்திகை - ஆகஸ்ட் 15
நாமக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தகுந்த இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து காவலர்கள் பங்கேற்றனர்.
rehearsal for the Independence Day event was held at Namakkal
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் காவல்துறை மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் கரோனா தொற்று களப் பணியாளர்களை சிறப்பிக்கும் நிகழ்வும் நாளை (ஆகஸ்ட் 15) நடத்தப்பட உள்ளது. இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 14) ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை தகுந்த இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்தவாறு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.