கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரத்தினை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில், இன்று முதல் வணிக நிறுவனங்களும், கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நாமக்கல் நகரின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், கடைவீதி,சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணிக்கு 90 சதவீத கடைகள் மூடப்பட்ட நிலையில், ஒரு சிலர் கடைகளை திறந்து வைத்திருந்தனர்.