நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக கண்புரை சிகிச்சை மையம் மூடப்பட்டது. இதனால் கண்புரை நோயினால் பாதிக்கப்பட்ட பல முதியவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது.
அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மையம் மீண்டும் திறப்பு!
நாமக்கல்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 மாதங்களுக்கு பிறகு கண்புரை அறுவை சிகிச்சை மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
Cataract
இந்நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மீண்டும் கண்புரை சிகிச்சை மையம் செயல்பட தொடங்கியது.
இதனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி தொடங்கிவைத்தார். இதில் முதற்கட்டமாக 5 பேர் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இனிவரும் காலங்களில் தொடர்ந்து கண்புரை அறுவை சிகிச்சைகள் நடைபெறும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.