தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ! - மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர்

நாமக்கல்: அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் தவறாகப் பேசி அத்துமீறியதால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

pocso act

By

Published : Nov 15, 2019, 10:16 AM IST

Updated : Nov 15, 2019, 11:55 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சுரேஷ் (37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இப்பள்ளியில் 49-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.

எட்டாம் வகுப்பில் எட்டு மாணவிகளும் ஒரு மாணவனும் படித்துவருகின்றனர். இப்பள்ளியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்தான் அதிகமாகப் படித்துவருகின்றனர். இந்நிலையில், நவ. 7ஆம் தேதி கணித ஆசிரியர் சுரேஷ் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் தவறாகப் பேசுவது, அத்துமீறுவது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கடிதம் வாயிலாக மாவட்டக் கல்வி அலுவலருக்கு புகாரளித்திருந்தனர்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட கல்வி அலுவலர் உதயக்குமார், சம்மந்தப்பட்ட ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதேநாளில் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல் துறையினர் ஏழு நாள்களுக்கு பிறகு ஆசிரியர் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியரை தேடிவரும் காவல் துறை

மேலும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் சுரேஷ் தலைமறைவாக உள்ளதால், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 15, 2019, 11:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details