தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணிமுத்தாற்றில் பொங்கும் நுரை -அச்சப்படும் மக்கள்! - கழிவுநீரால் பொங்கும் நுரை

நாமக்கல்: திருமணிமுத்தாற்றில் மீண்டும் கழிவு நீர் கலப்பினால் பொங்கி வரும் நுரையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

thirumanimutharu

By

Published : Sep 18, 2019, 12:25 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மதியம்பட்டி பகுதியில் திருமணிமுத்தாறு பாய்ந்து ஓடுகிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று நன்செய் இடையாறு அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், சேலம் சுற்று வட்டாரங்களில் பெய்த கன மழை காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நுரையுடன் வெளியாகும் நீர்

ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தரைப்பாலம் மூழ்கி விடும் நிலையில் மதியம்பட்டி செளரிபாளையம் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மதியம்பட்டி சௌரிபாளையம் வெளியே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், மதியம்பட்டி, சௌரிபாளையம், கல்கட்டனூர், பொரசபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பொங்கும் நுரை

இந்நிலையில், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பணிக்குச் செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கு அரசு அலுவலர்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஆற்று வெள்ளத்தில் அதிக அளவு ரசாயனம் கலந்த நீர் கலப்பதால் ஆற்றுநீர் அதிகளவு நுரை பொங்கி செல்கின்து. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரசாயான நீரால் கெடும் திருமணிமுத்தாறு

ABOUT THE AUTHOR

...view details