தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு மாசமா கரண்ட் இல்ல..! டிரான்ஸ்பார்மரை தூக்கிச் சுமந்த மலைக்கிராம மக்கள்..! - Namakkal news

ராசிபுரம் அடுத்த போதமலை மலைப்பகுதியில் சாலையின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் தற்போது ஒரு மாத காலமாக மின்சாரம் இன்றி பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

40 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் போராட்டம்
40 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் போராட்டம்

By

Published : Jul 1, 2023, 10:04 PM IST

Updated : Jul 1, 2023, 10:34 PM IST

சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் - அரசு நடவடிக்கை தேவை

நாமக்கல்: பொதுவாக மலைவாழ் கிராமங்கள் என்றாலே அனைவரது பார்வைகளில் இருந்தும் சற்று விலகியே காணப்படுகின்றது. எளிதாக கிடைக்கும் சில எதார்த்தங்களைக் கூட அவர்கள் போராடி பெற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சாலை வசதி, போக்குவரத்து, கல்வி என அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மலைவாழ் மக்களின் போராட்டங்களில் மின்சாரமும் ஒன்றாக சேர்க்கப்பட்டிருப்பது கவலைக்கிடமாக உள்ளது.

ராசிபுரம் அடுத்த போதமலை பகுதியில் கீழூர், மேலூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மலைப்பகுதிக்கு மின்சாரமானது வழங்கப்பட்டது. கீழூர், மேலூர் கிராமத்தில் மின்மாற்றில் பழுது ஏற்பட்டதன் காரணமாக அங்கு கடந்த 1 மாத காலமாக மின்சாரம் இன்றி மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் புதுப்பட்டி மின்வாரியத் துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, பணியில் இருந்த ஊழியர்கள் பழுது அடைந்த மின்மாற்றியை மலைப்பகுதியில் இருந்து கீழே இறக்கி வருமாறு கிராம மக்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதனை அடுத்து மலைவாழ் மக்கள் மின்மாற்றியை கொண்டு வந்து போதமலை அடிவாரத்தில் வைத்துள்ளனர். பின் அடிவாரத்தில் வைக்கப்பட்ட பழைய மின்மாற்றி கொண்டு சென்ற மின்வாரிய ஊழியர்கள் அலுவலகத்தில் ஒப்படைத்து புது மின்மாற்றியை கடந்த ஜூன் 20ம் தேதி போதமலை அடிவாரத்தில் வைத்துள்ளனர்.

தற்போது மின்மாற்றி வைத்து 10 நாட்கள் ஆனதை தொடர்ந்து, மின்மாற்றியை மலைப் பகுதிக்கு எடுத்து செல்ல முடியாத நிலையில் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மலைவாழ் மக்கள் மின்மாற்றி ஊன்றுகோல் உதவியுடன் தூக்கிச் செல்ல முயன்ற போது மின்மாற்றியை தூக்கிச் செல்லும் முயற்சியானது தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து புதுப்பட்டி மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் விக்னேஷிடம் கேட்டபோது, மலைவாழ் மக்கள் மின்மாற்றியை மலைப்பகுதிக்கு கொண்டு சென்ற பிறகு தான் மின்மாற்றியை அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சாலை வசதி இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் தற்போது மின்சாரம் இன்றி 1 மாத காலமாக தவித்து வருவது பெரும் வேதனைக்குரியதாக உள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது ராசிபுரம் வட்டாட்சியர் மலைவாழ் கிராமத்தில் உள்ள மின்மாற்றியை ஆய்வு செய்துள்ளதாகவும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் ஒரிரு நாட்களில் மின்மாற்றி மேலே கொண்டு செல்லப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உமா விளக்கம் அளித்துள்ளார்.

பெரும்பான்மை சாமூகத்தின் முன், எண்ணிக்கையில் சிறுபான்மையினராய் இருக்கும் மலைவாழ் மக்களின் குரல் அவர்கள் வசிக்கும் மலைகளுக்குள்ளேயே முடங்கி விடுமோ என்கிற கேள்வியும், அச்சமும் எழுகிறது.

இதையும் படிங்க:Nellaiappar Temple Car fest 2023: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்; காவல்துறை வெளியிட்ட முக்கிய அட்வைஸ்!

Last Updated : Jul 1, 2023, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details