நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிபட்டி பகுதியில் முன்னாள் எம்பி சுந்தரத்திற்குச் சொந்தமாக மஞ்சள் குடோன் உள்ளது. இதில் 8 டன் கொண்ட சுமார் 15 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று (பிப். 4) அதிகாலை மஞ்சள் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்துவந்த நாமக்கல், சேலம், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் உள்ள தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.