நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர், விநாயகர் கோயில் அருகே 'விக்கி' என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் சுற்றித் திரிந்தது. விக்கி அப்பகுதி மக்களிடம் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தது.
அதிலும் இரவில் சந்தேகப்படும் வகையில் வரும் நபர்களைத் தெருவில், அனுமதிக்கவிடாமல் கூச்சலிட்டுப் பாதுகாத்து வந்துள்ளது. இதனால் திருடர் பயமின்றி அப்பகுதி மக்கள் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, 'விக்கி' உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலிருந்தது. இதனால் அப்பகுதி இளைஞர்கள், விக்கியை கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தனர்.