தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகள் விற்பனை வழக்கு: ஏழு பேருக்கு காவல் நீட்டிப்பு

நாமக்கல்: பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் தொடர்புடைய ஏழுபேருக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்

By

Published : Aug 1, 2019, 3:23 PM IST

Updated : Aug 1, 2019, 3:37 PM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஏப்ரல் 25ஆம் தேதி வெளியான ஆடியோ விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி, அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் ரவிச்சந்திரனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்களான பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் சேலம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சாந்தி, பெங்களூருவைச் சேர்ந்த ரேகா, கார் ஓட்டுநர் நந்தகுமார், கொல்லிமலையைச் சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு
இந்நிலையில் கைதானவர்களில் ஓய்வுப்பெற்ற செவிலியர் அமுதவல்லி உட்பட 4 பேர் ஜாமீன் பெற்ற நிலையில், மீதமுள்ள இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா,அருள்சாமி,செல்வி, சாந்தி, ரேகா, நந்தகுமார் ஆகியோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததால், காவல்துறையினர் ஏழு பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதையடுத்து விசாரணை நடத்திய நீதிபதி லதா, குற்றவாளிகள் ஏழு பேரையும் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Last Updated : Aug 1, 2019, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details