நாமக்கல்:நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிஎஸ்டி கட்டுமான நிறுவன உரிமையாளர் பி.எஸ்.தென்னரசு. இவர் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கட்டடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள், குடிசை மாற்று வாரியக் கட்டட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
இவரது நிறுவனம் தான் சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியம் கட்டடத்தை கட்டியுள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் கதவணை, பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரிகளையும் கட்டியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் இந்நிறுவனத்திற்கு அதிகளவில் கட்டுமான ஒப்பந்தங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று (அக்.22) அவரது வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.