தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் - ராகுல்காந்தி

நாமக்கல்: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி குமரி, நாமக்கலில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

BJP protests

By

Published : Nov 19, 2019, 2:07 AM IST

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், பிரதமர் மோடியை 'திருடன்' என்று கடந்த மே மாதம் நடைப்பெற்ற மக்களவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதுதொடர்பாக பாஜக-வின் செய்தித்தொடர்பாளர் மீனாட்சி லேகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் ராகுல் காந்தி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மோடியை அவதூறாக பேசிய ராகுல் காந்தியை நீதிமன்றம் எச்சரித்துள்ளதால், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க கோரியும், காங்கிரஸ் தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதை கைவிடக் கோரியும் நாமக்கல் பூங்கா சாலையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமரி, நாமக்கல்லில் பாஜக-வினர் ஆர்பாட்டம்

நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதேப் போல் குமரி மாவட்டம் நாகர்கோவலிலும் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ராகுல் காந்தியை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details