நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள கொத்தம்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இரவு நேரங்களில் இப்பகுதியில் லாரிகள் மூலம் ஆற்று மணலை திருடிச் செல்வதாக அப்பகுதி பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்தது.
ஆற்று மணல் திருட்டு: லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்! - Namakkal District News
நாமக்கல்: கொத்தம்பாளையத்தில் ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியைப் பொதுமக்கள் சிறைப்பிடித்து எலச்சிபாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மணல் திருட்டு
இதனையடுத்து நேற்று (டிச. 10) அங்கு வந்த லாரியைப் பொதுமக்கள் மடக்கி சோதனையிட்டனர். அதில் எம்.சாண்ட் மணலை மேற்பரப்பில் பரப்பிவிட்டு அடிப்பகுதியில் ஆற்று மணலைத் திருடிச் சென்றது தெரியவந்ததையடுத்து, லாரியைச் சிறைப்பிடித்தனர்.
இத்தகவலின்பேரில் அங்குவந்த எலச்சிபாளையம் காவல் துறையினர் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியைப் பறிமுதல்செய்து, ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.