தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வார்டு மறுவரையறை குளறுபடி: பொதுமக்கள் போராட்டம் - வார்டு மறுவரையறை பிரச்சனை

நாமக்கல் அருகே வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறி 300-க்கும் மேற்பட்டோர் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Public Sudden Road Stir
தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் போராட்டம்

By

Published : Feb 3, 2022, 1:59 PM IST

நாமக்கல்: பரமத்திவேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து வார்டுகளும் மறுவரையறை செய்யப்பட்டன.

இதனடிப்படையில் வேலூர் பேரூராட்சிக்குள்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தில் மூன்றாவது வார்டு பகுதியிலிருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பட்டியல் ஒழூர்பட்டிக்கு மாற்றம்செய்யப்பட்டது.

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

இந்நிலையில் ஒழூர்பட்டிக்கும், குப்புச்சிபாளையத்திற்கும் இடையே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு உள்ளது. வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி அப்பகுதியினர் பலமுறை கோரிக்கைவிடுத்துள்ளனர்.

எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணதால் நேற்று (பிப்ரவரி 2) 300-க்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குகளை ஒழுகூர்பட்டியிலிருந்து விடுவித்து அருகில் உள்ள குப்புச்சிபாளையத்தில் இணைக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் அங்கு வந்த வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், அப்பகுதி மக்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பரமத்திவேலூர் - மோகனூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்தச் சாலை மறியலால் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திமுக வட்டச் செயலாளர் கொலை: இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details