தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக்கழிவுகளைக் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு..! - medical waste

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே ராயர் பாளையத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா கல்லூரியில் இருந்து வெளியாகும் கழிவுகளால் 4 கி.மீ சுற்றளவுக்கு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகக் கூறி, கழிவு ஏற்றி வந்த வாகனத்தைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மருத்துவக்கழிவுகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு..!

By

Published : Jul 16, 2019, 7:59 AM IST

திருச்செங்கோட்டை அடுத்த ராயர் பாளையத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா கல்லூரிக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாகக் கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை, அங்குள்ள தென்னை மரங்களுக்குப் பயன்படுத்தியாகத் தெரிகிறது. சுத்திகரிக்காமல் தண்ணீரை பாய்ச்சுவதால் சுற்று வட்டாரத்தில் உள்ள 4 கி.மீ அளவுக்கு, விவசாய நிலங்களிலுள்ள ஆழ்துளைக் கிணற்று நீர் கெட்டுப்போய் குடிக்கப் பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு..!

விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், சோளம் கூட விளைவதில்லை எனவும், ஆடு மாடுகள் கோழிகள் இந்த தண்ணீரை குடிப்பதால் இறப்பதாகக் கூறுகின்றனர் கிராம மக்கள். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அதே இடத்தில் கல்லூரிகளின் குப்பைகளையும், மருத்துவ கழிவுகளையும் கொண்டு வந்து கொட்டுவதாகக் கூறும் பொதுமக்கள், நேற்று அவ்வாறு குப்பைகளை ஏற்றி வந்த ஒரு டிராக்டரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25 பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் சிறை பிடித்த டிராக்டரை விடுவித்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ராயர்பாளையம் பகுதியில், சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details