நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா கல்லுபாளையம் ஊராட்சிக்குள்பட்ட அருந்ததியர் தெருவில் 250 குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு! - கோயில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து ஆட்சியரிடம் மனு
நாமக்கல்: கோயில் நிலத்தை ஆக்கிரமித்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இவர்களுக்குச் சொந்தமாக வீரமாத்தியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 50 சென்ட் நிலம் உள்ளது.
இந்நிலையில் அந்த நிலத்தை பொன்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவரான சோமசுந்தரம் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனால் கோயில் சம்பந்தமான எவ்வித விழாக்களையும் நடத்த முடியவில்லை எனவும் இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கோயில் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு செய்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.