மத்திய அரசு சமீபத்தில் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் அலோபதி மேற்படிப்பு படித்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் - இந்திய மருத்துவ சங்கம்
நாமக்கல்: அனைத்து மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 280 தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் புறநோயாளிகளுக்கு இன்று (டிசம்பர் 11) ஒரு நாள் மட்டும் சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவர்களும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்தும், இந்த முடிவால் நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன், மருத்துவ முறைகளின் தனித்துவமும் பாதிக்கப்படும் என்றும் எனவே மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.