நாமக்கல் மாவட்டம் வாழவந்தி அடுத்த ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (40). இவர் நாமக்கல்லில் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
ஆம்புலன்ஸ் விபத்து: லேசான காயங்களுடன் உயிர் தப்பிய ஓட்டுநர் - நாமக்கல் மாவட்ட செய்திகள்
நாமக்கல்: இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்ல சென்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
அப்போது பரமத்தி சாலையில் தனியார் வங்கி அருகே அவர் லாரியை முந்திச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தங்கவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று தங்கவேலுவின் உடலை மீட்க சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மின் தடை பதிவு மையத்தின் மதில் சுவர் மீது மோதி குப்புற கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பரத் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
நாமக்கல் காவல் துறையினர் வந்து உயிரிழந்த தங்கவேல் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த இரண்டு விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.