நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (32). இவர் பிரசவ வலி காரணமாக கடந்த 9ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு நேற்று மாலை ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்குப் பின் ரேவதிக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ரேவதி நேற்றிரவு உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையே ரேவதி உயிரிழப்பிற்குக் காரணம் எனவும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி ரேவதியின் உறவினர்கள் நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.