தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராசிபுரம் கோழிப்பண்ணையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை - Poultry farm income tax raid

நாமக்கல்: ராசிபுரம் அருகே கோழித் தீவன ஆலை, கோழிப்பண்ணையில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

Poultry farm income tax raid
Poultry farm income tax raid

By

Published : Feb 28, 2020, 3:10 PM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெள்ளகல்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை, கோழித் தீவன ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோழிப்பண்ணைக்கு பங்குதாரர்களாக ஐந்து பேர் உள்ளனர். இந்நிலையில் கோழிப்பண்ணை, கோழித் தீவன ஆலையில் அதிகாலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனை காலை 9 மணியளவில் நிறைவடைந்தது. வருமான வரித்துறையினர் நடத்திய இந்த அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோழிப்பண்ணையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

வரி ஏய்ப்பு செய்ததாக வந்தப் புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாக வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் வெள்ளகல்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'எனக்கா கறி இல்லனு சொல்ற... அப்போ அதைச் சாப்பிட்டா கொரோனா வருதுனு நான் சொல்வேன்’ - வதந்தி பரப்பிய சிறுவன் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details