ஆண்டு முழுவதும் விவசாய தொழிலுக்கு பாடுபடும் கால்நடைகளை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையின் 2ஆம் நாள் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்பட்டுவருகிறது. அன்றைய தினம் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் உழைக்கும் கால்நடைகளை குளிப்பாட்டி புது கயிறுகளை கட்டி, கலர் குங்குமங்களை கொண்டு அழகுபடுத்துவர். இதனையொட்டி நாமக்கல்லில் விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளுக்கு அணிவிக்க புது கயிறுகளையும், கலர் குங்குமங்களையும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
குறிப்பாக இவ்வாண்டு புதியதாக சலங்கையுடன் கூடிய கழுத்து கயிறுகள், கொம்பு கயிறுகள், நூல் மற்றும் நைலான் கயிறுகள் என பல்வேறு வண்ணங்களில் கயிறுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல் கால்நடைகளை அலங்கரிக்க குங்குமங்களையும் விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள்.