தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கை மதிக்காத நாமக்கல் வாசிகள்; கெடுபிடி காட்டும் போலீஸ்! - Namakkal,covid 19, curfew,144, police, warning, vehicle, seized

நாமக்கல்: ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்காமல் சாலையில் சுற்றுபவர்களைக் காவல் துறையினர் கடுமையாக எச்சரித்தும், வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்து வருகின்றனர்.

காவல் துறையினர் சோதனை
காவல் துறையினர் சோதனை

By

Published : Mar 27, 2020, 6:25 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவமால் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தபட்ட போதிலும் பொதுமக்களுக்கு காய்கறி, மளிகை, பால், மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பலர் தங்களது இரு சக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.

காவல் துறையினர் சோதனை

இதனைக் கட்டுப்படுத்தும் விதமாகக் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாமக்கல் நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் தடுப்பு வேலிகளை அமைத்து அத்தியாவசியம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை எச்சரித்தும், தலைக்கசவசம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்தனர்.

அந்த வகையில், நேற்று வரை நாமக்கல் மாவட்டத்தில் 164 நபர்கள் கைது செய்யப்பட்டும், 56 வாகனங்களைப் பறிமுதல் செய்தும் காவல் துறையினர் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details