தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைதுசெய்தவர்களை விடுவிக்கக்கோரி காவல் நிலையம் முற்றுகை - காவல் நிலையம் முற்றுகை

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே பொய் வழக்கில் கைதுசெய்தவர்களை விடுவிக்கக்கோரி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்ட காவல் நிலையம்
முற்றுகையிட்ட காவல் நிலையம்

By

Published : Mar 15, 2020, 9:25 AM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் பள்ளிக்குச் செல்வதற்காக நின்றுகொண்டிருந்த மாணவியை கேலி, கிண்டல் செய்தும், காதல் வசனங்கள் பேசியதாகவும் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் காவல் துறையினர் ஐந்து பேரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி எச்சரிக்கைவிடுத்து அனுப்பினர். இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் தங்களை சாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதாகக்கூறி அந்த ஐந்து பேரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த இருதரப்பு புகாரின் அடிப்படையில் பரமத்தி காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இதையடுத்து ஒரு தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களின் பெற்றோர், உறவினர்கள் திடீரென பரமத்தி காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து, கைதுசெய்தவர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் நிலையம் முற்றுகை

பின்னர், அங்கு வந்த பரமத்தி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்பு அங்கிருந்தவர்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: பத்து கடைகளுக்கு சீல் வைப்பு - வியாபாரிகள் முற்றுகை!

ABOUT THE AUTHOR

...view details