தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் மயங்கிக் கிடந்த பெண்ணுக்கு தக்க சமயத்தில் உணவளித்த காவலர்கள்! - namakkal orphanage women

நாமக்கல்: மோகனூர் சாலை அண்ணா சிலையருகே மயங்கி கிடந்த பெண்ணுக்கு தக்க சமயத்தில் உணவு, குடிநீர் வழங்கிய காவலர்களின் செயலைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டச் செய்திகள்  விடியல் இல்லம்  சாலோயரத்தில் மயங்கி விழுந்த பெண்  namakkal news  namakkal recent news  namakkal orphanage women  police recover the orphanage women in namakkal
சாலையில் மயங்கிக்கிடந்த பெண்ணுக்கு உணவளித்த காவலர்கள்

By

Published : May 3, 2020, 3:02 PM IST

நாமக்கல் தில்லைபுரத்தில் சங்கீதா என்பவர் விடியல் இல்லம் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்திவருகிறார். இங்கு தாய், தந்தை இல்லாதவர்கள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்றவர்கள், விதவைப் பெண்கள் என பலரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு தங்கியிருந்த ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹேமலதா, அவரது இரண்டு குழந்தைகள், பரமத்தி வேலூரைச் சேர்ந்த சங்கீதா, தெய்வானை ஆகியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து தப்பித்து மோகனூர் சாலை அண்ணா சிலை அருகே வந்தபோது ஹேமலதா திடீரென சாலையோரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

சாலையில் மயங்கிக்கிடந்த பெண்ணுக்கு உணவளித்த காவலர்கள்

இதனைக்கண்ட காவலர்களும், தன்னார்வலர்களும், அப்பெண்கள், குழந்தைகளுக்கு தண்ணீர், உணவுகளை வழங்கினர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் தங்கியிருந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கவில்லை என்றும் உணவு கேட்டதற்கு அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர், ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியை காவல் நிலையம் அழைத்துவந்து காவல் துறையினர் விசாரித்தனர். மேலும், அங்கு தங்கியிருந்த அனைவரையும் வேறு இல்லத்தில் தங்க வைக்க குழந்தைகள் நலக்குழுவினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சாலையில், மயங்கிக் கிடந்த பெண்ணுக்கு தக்க நேரத்தில் உணவளித்து காப்பாற்றிய காவலர்களின் செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பாளர்களுக்கு மருந்தான காவலரின் விசில் இசை!

ABOUT THE AUTHOR

...view details