தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் சாலைவிதி மீறியவர்களிடமிருந்து 2.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு! - நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு

நாமக்கல்: 2019ஆம் ஆண்டில் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடமிருந்து 2.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.

Breaking News

By

Published : Jan 1, 2020, 6:01 AM IST

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், காவல் துறையினர் சார்பில், சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியும் சாலை விபத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, "இந்தாண்டு விபத்தில்லா ஆண்டாகவும் பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் இன்று இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

2016ஆம் ஆண்டு 520 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதன்காரணமாக மூன்று ஆண்டுகளாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக உயிரிழப்புகள் குறைந்தன. அதன்படி 2019ஆம் ஆண்டு 316 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு

இதேபோல், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறையும், மேலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் 2018ஆம் ஆண்டு 1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர். 2019ஆம் ஆண்டு 2.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:''அபராதம் வாங்கவில்லை'' சமூகவலைதளங்களில் பரவும் போக்குவரத்து ஆய்வாளரின் மோசடி!

ABOUT THE AUTHOR

...view details