நாமக்கல் - திருச்சி மாவட்டங்களை இணைக்கும் எல்லையான வளையப்பட்டி அடுத்துள்ள எம். மேட்டுப்பட்டியில் உள்ள சோதனைச்சாவடியில் இ - பாஸ் இல்லாமல் திருச்சி மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்களை காவல் துறையினர் எவ்வித பரிசோதனையும் செய்யாமல் பணம் பெற்றுக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதித்து வந்ததாக புகார் எழுந்தது.
பணம் பெற்று மாவட்டத்திற்குள் வாகனங்களை அனுமதித்த விவகாரம்: காவலர்களிடம் விசாரணை - எம்.மேட்டுப்பட்டி சோதனைசாவடி
நாமக்கல்: நாமக்கல்- திருச்சி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் காவலர்கள் பணம் பெற்று வாகனங்களை அனுமதித்த விவகாரம் தொடர்பாக காவலர்களிடம் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, இன்று(ஜூன் 26) எம்.மேட்டுப்பட்டி சோதனைச் சாவடியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமார், நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி, எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மூன்று மணிநேர விசாரணையில் பணியிலிருந்த காவலர்களின் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.