நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பெண் டிஎஸ்பியாக இருந்தவர், விஷ்ணுபிரியா. இவர், பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அலுவலராகச் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, தனது முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்பட்ட விஷ்ணுபிரியா பயன்படுத்தி வந்த டேப், செல்போன், வீடியோ கேமரா உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களில் இருந்த தகவல்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகக் கூறி, காவலர்கள் முத்துக்குமார், ரவிக்குமார், டிஎஸ்பிக்கள் ராஜு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி ஆன்லைன் மூலமாக நாமக்கல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புப் பிரிவிடம் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.