தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜேடர்பாளையம் அருகே 2,000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு..! போலீசார் தீவிர விசாரணை - Police inquiry on destruction of banana trees

Jedarpalayam: நாமக்கல் அருகே ஜேடர்பாளையம் அருகே 5 ஏக்கர் விவசாய தோட்டத்தில் உள்ள, 2000 வாழை மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jederpalayam Police inquiry on destruction of banana trees
ஜேடர்பாளையம் அருகே 2000 வாழை மரங்களைவெட்டி சாய்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 11:06 PM IST

ஜேடர்பாளையம் அருகே 2000 வாழை மரங்களைவெட்டி சாய்ப்பு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே புதுப்பாளையத்தில் இளங்கோ, மணி ஆகியோருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய தோட்டத்தில் பயிரடப்பட்டிருந்த 2,000 வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த இருவரும், இச்சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் தடவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள தடயங்களை சேகரிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்குள் மீண்டும், விவசாய நிலங்களில் மரங்களை வெட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மடப்புரம் காளி அம்மன் கோயில் உண்டியல் பணியின்போது 10 சவரன் தங்க நகை திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய செயல் அலுவலர்!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பெரும்பாலான காவலர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளதால், இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் வாழை மரங்களை வெட்டி சாய்த்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 9 மாதங்களாக ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டுவது, தீ வைப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கால் வைக்கவும் இடமில்லை..மூச்சு விடவும் இடமில்லை; புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரயில் வசதி செய்ய கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details