தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்! - கரோனா எண்ணிக்கை

நாமக்கல்: நகர் புறங்களில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

முகக்கவசம் அணியாமல் வாகங்களில் சென்றவர்களுக்கு அபராதம்!
Police fined from people

By

Published : Sep 8, 2020, 10:23 PM IST

கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்கள், வாகனங்களில் பயணிப்போர் கட்டாயம் முகக்கவசம் அணியவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என அண்மையில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், முகக்கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களை நாமக்கல் நகராட்சி அலுவலர்கள் தடுத்து நிறுத்தி அபராதம் வசூலித்து வருகின்றனர். அதன்படி நாமக்கல் - திருச்சி சாலை, சேலம் சாலை, மோகனூர் சாலை உள்ளிட்ட இடங்களில் நகராட்சி அலுவலர்கள் மூன்று குழுவினர், முகக்கவசம் அணியாமல் சாலையில் பயணித்தவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.

முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் லாரி, டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details